பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் விஜய் நன்றி

தமிழக மக்களின் நலனும் முன்னேற்றமும் எங்களின் ஒரே நோக்கமாகும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் விஜய் நன்றி
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-"தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.” என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு தமிழக முதல் அமைச்சர் விஜய்யும் நன்றி தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: - நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதையொட்டி பிரதமர் மோடி தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோள். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக மத்திய அரசின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்நோக்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com