கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தமிழக முதல்-அமைச்சரின் விருது: எஸ்.பி. வாழ்த்து


கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தமிழக முதல்-அமைச்சரின் விருது: எஸ்.பி. வாழ்த்து
x

2023-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கா பரிசு" வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, காவல் நிலையம் சார்பாக அதற்கான விருதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் கடந்த 6.9.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து காவல்துறை தலைமை இயக்குனரிடம் "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை பெற்றார்.

இதனையடுத்து விருது பெற்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் உட்பட சப்-இன்ஸ்பெக்டர்களை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டி, எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின்போது கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் உடனிருந்தார்.

1 More update

Next Story