பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. #aiadmk #tnassembly
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலேசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.3) காலை 10 மணியளவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியேர் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.

வழக்கமாக, பேரவை கூடுவதற்கு முதல் நாளில்தான் எம்எல்ஏக்கள் ஆலேசனைக் கூட்டம் நடக்கும். தற்பேது முன்கூட்டியே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. பேரவைக் கூட்டத்தில் சுயேச்சை எம்எல்ஏவாக தினகரன் பங்கேற்கிறார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பங்கேற்க முடியாது.

சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். தினகரன் தரப்பினரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலேசனை வழங்க உள்ளனர். கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #aiadmk #tnassembly

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com