

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழக அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டிடங்கள், அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் விஜய்-யின் அலுவல் புகைப்படம் வெளியாகியுள்ளது.