

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. நோய்ப்பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், தமிழ்நாட்டில் இந்த நிலையை மாற்றுவது நமக்கு பெரும் சவாலாகவே இருக்கும். ஆனாலும் கூட இன்று முதல் புதிய தொற்றுகள் ஏற்படுவதைத் தடுத்தால் அடுத்த 14 நாட்களில் இந்த மாவட்டங்களை தீவிர பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து விட முடியும்.
எனவே, மீண்டும், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம். இனி வரும் நாட்களில் ஊரடங்கை மிகத்தீவிரமாக கடைபிடித்து தமிழ்நாட்டை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமாக மாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.