அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.
அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
Published on

மதுரை,

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அதற்கான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து முழுவீச்சில் ஏற்பாடு செய்து வருகின்றன.

குறிப்பாக பார்வையாளர்கள் கேலரி, வாடிவாசல், முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தேங்காய்நார் பரப்புதல், குடிநீர் வசதி, பார்வையாளர்கள் கண்டு மகிழும் வகையில் பெரிய எல்இடி திரைகள் அமைத்தல் போன்ற பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அவனியாபுரத்தில் இன்று மாடுபிடி வீரர்களுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் ஏராளாமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com