மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழு கலைப்பு; தமிழக அரசு நடவடிக்கை

பணிகளை ஒருங்கிணைக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழு கலைப்பு; தமிழக அரசு நடவடிக்கை
Published on: 

சென்னை,

மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை ஆராய்ந்து மாநில உரிமைகளை பாதுகாக்கவும், கூட்டாட்சியை வலுப்படுத்தவும் கடந்த திமுக ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன் இடம்பெற்றிருந்தனர்.

குழு கலைப்பு

இந்நிலையில், மத்திய - மாநில அரசு உறவை வலுப்படுத்துவதற்கான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய-மாநில உறவுகள் தொடர்பான விவகாரங்களை இனி மாநில சட்ட ஆணையமே நேரடியாக கையாளும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் நிர்வாக செலவை குறைத்து, பணிகளை ஒருங்கிணைக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

X