

எல் நினோ தாக்கத்தால் நாடு முழுவதும் குறுகிய கால மின்தேவை மற்றும் கொள்முதல் செலவுகள் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2027 மார்ச் முதல் ஐந்தாண்டுகளுக்கு நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் 3, 000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளைத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கோரியுள்ளது.
குறுகிய கால ஒப்பந்தப் புள்ளிகள்மூலம் போதுமான மின்சாரத்தைப் பெறுவதில் அதிக விலை மற்றும் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து போதிய வரவேற்பு இல்லாததால் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு குறுகிய கால ஒப்பந்தப்புள்ளிகளை நிராகரித்த அல்லது ரத்து செய்த நிலையில்,நிலக்கரி அடிப்படையிலான அனல்மின்நிலையங்களுக்கு மட்டுமே தகுதி வரம்பு விதிக்கப்பட்ட ஐந்தாவது ஒப்பந்தப்புள்ளியில், யூனிட் ஒன்றுக்கு ரூ.9 முதல் ரூ.20 வரையிலான விலையில் மின்வாரியத்திற்கு ஏலங்கள் கிடைத்தன.
இதற்கிடையே, நடுத்தர கால மின் கொள்முதல் திட்டமானது வளப்போதுமான ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்துத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஆட்சேபனைகள் எழுப் பப்பட்டன. கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 2027 மார்ச் 1 முதல் 1,500 மெகா வாட்மின்சாரம் கொள்முதல் செய்ய அனுமதி கோரியிருந்த மின்வாரியம், பின்னர் அத்த அளவை 3,000 மெகா வாட்டாக உயர்த்தியது. கொள்முதல் அளவை உயர்த்தியதற்கான காரணங்களைக் கேள்வி எழுப்பிய பெசோட் அமைப்பின் தலைவர் எஸ். காந்தி, வளப் போதுமான ஒழுங்குமுறை விதிகளுடன் இது ஒத்துப்போகிறதா என விளக்கம் கோரினார்.
அவரது ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, வளப்போது மானதிட்டம்,தற்போதுள்ள மின் கொள்முதல் ஏற்பாடுகள், நடந்து வரும் திட்டங்களின் நிலை மற்றும் மின்திட்டங்களைச் செயல்படுத்துவதுதொடர்பான வழக்குகள் குறித்த விவரங்களைச்சமர்ப்பிக்குமாறு மின்வாரியத்திற்கு நவம்பர் 3-ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நவம்பர்12-ஆம்தேதி நடை பெற்ற அடுத்த விசாரணையில், மின்வாரியம் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகளைத் தொடரடி.என்.பி.டி.சி.எல். க்கு ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால், அந்தக் கூடுதல் பிரமாணப் பத்திரத்தின் நகல் தமக்கு வழங்கப்ப டவில்லை என்றும், நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் அடுத்தவிசாரணையில் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் மின்துறை அதிகாரி கூறினார்.