தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி பயணம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழியனுப்பியது

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி பயணம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழியனுப்பியது
Published on

இந்த நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை ரெயில் மூலம் புறப்பட்டு செல்ல இருந்த தமிழக விவசாயிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வழி அனுப்பி வைத்தது. இதற்கான நிகழ்ச்சி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

வழியனுப்பும் நிகழ்ச்சியில் முத்தரசன் பேசுகையில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அப்படி திரும்ப பெறாவிட்டால், மோடி அரசாங்கத்தை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருதாமல், கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும். வேளாண் சட்டங்களை நீக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் விரிவடைந்து அடுத்தக்கட்ட எல்லைகளை கடக்கும், என்றார். அதனைத்தொடர்ந்து விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com