இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்த தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் வலையை அறுக்க முயன்றுள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்த தமிழக மீனவர்கள்
Published on

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூரை சேர்ந்த 5 பேர் நேற்று ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஸ்பீட் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் வலையை அறுக்க முயன்றுள்ளதாக கூறுகின்றனர். தொடர்ந்து தமிழக மீனவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுக்க முயன்றதை பார்த்ததும் சுதாரித்து கொண்டு அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து ஸ்பீட் படகில் வந்த மூவரில் இருவர் தப்பித்து சென்றுவிட்ட நிலையில் ஒருவரை மட்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடித்து கடற்கரைக்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com