இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து, தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த இரு மாதங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது 7-வது முறையாகும். இவர்களையும் சேர்த்து 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22-ஆம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளில் அடுத்த அத்துமீறல் நடந்துள்ளது.

ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழகத்திலிருந்து எதிர்ப்பு எழுவதும், அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி விடக் கூடாது. மீனவர்கள் கைது செய்யும் சிங்களப்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் வாடும் 10 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 95 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com