ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு – மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்

சென்னை விமான நிலையத்திற்குச் சென்று மீனவர்களை பியூஸ் கோயல் வரவேற்றது மகிழ்ச்சி என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் மீட்பு – மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படியும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் தீவிர முயற்சியினாலும் ஈரானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், இன்று சென்னை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி.

போர் பதற்றம் காரணமாக இத்தனை நாட்களும் ஈரானில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த மீனவப் பெருமக்களைச் சிறப்புப் பாதுகாப்புடன் நமது தாய்நாட்டிற்கு அழைத்து வந்து, அவரவர் குடும்பத்திடம் பத்திரமாக ஒப்படைத்த நமது மத்திய அரசிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com