தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று மற்றும் நாளை என 2 நாள் 'தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் நாள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளா்களுடன் பொது தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், டெவலப்பர்கள், ஆபரேட்டர்கள், முடிவெடுப்பாளர்கள், கூட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு பிரபல நிறுவனங்களை சேர்ந்தோர் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் விதமாக உலகளாவிய சுற்றுலா மாநாடு நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்பும் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com