தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. புகைப்பட கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துத்துறை அமைச்சர் மற்றும் பிற துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com