தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் மாரியப்பன், சகுந்தலா இணைச் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சேரந்தை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டு விட்டு அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் உள்ள 4 லட்சம் காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com