ஆந்திர மாநிலத்தில் மின் கட்டமைப்பை சீரமைக்கும் பணிக்கு உதவ தமிழ்நாடு அரசு முடிவு

தமிழக மின்வாரிய பணியாளர்கள் ஆந்திரா செல்கின்றனர் இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் மின் பணியாளர்கள் குழு ஆந்திரா விரைகிறது
மின் வாரியம்
Published on: 

’அர்னாப்’ புயலைத் தொடர்ந்து தற்போது ’முரசு’ புயல் ஆந்திராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அர்னாப் புயலால் 4,000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது உருவாகியுள்ள முரசு புயலால், ஆந்திராவில் கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையான . முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர அரசு எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல் அமைச்சர் விஜயிடம் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார். நேற்று விஜயுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய சந்திரபாபு, முரசு புயலால் ஆந்திராவில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பலத்த காற்றும் வீசும் என்பதால் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால், புயல் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மின் விநியோக கட்டமைப்பில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

எனவே, மின் விநியோக கட்டமைப்பு பணிகளை விரைந்து சரிசெய்ய, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்குத் தமிழகத்திலிருந்து மின்துறை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி வைத்து உதவுமாறு கோரிக்கை விடுத்து இருந்தார். ஆந்திர முதல் அமைச்சரின் இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திராவுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இதன்படி, தமிழக மின்வாரிய பணியாளர்கள் ஆந்திரா செல்கின்றனர் இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் மின் பணியாளர்கள் குழு ஆந்திரா விரைகிறது

X