தமிழகத்தின் எல்.நினோ பாதிப்புகள் குறித்து அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை: ஈ.ஆர்.ஈஸ்வரன்

சென்னை மற்றும் கடலூர் போன்ற மாநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
ஈ.ஆர்.ஈஸ்வரன்
Published on: 

சென்னை,

எல்.நினோ தாக்கம் பற்றி தமிழக அரசு கவலைப்படுவதாகவும், அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை. பேராபத்தை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

2026-ம் ஆண்டு உருவாகியுள்ள தீவிர 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி மற்றும் தீவிர கனமழை, வெள்ளம் என இரண்டு விதமான வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எல் நினோ தாக்கத்தினால் அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் வரலாற்று ரீதியாக அதிக மழை அல்லது தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12 மாவட்டங்கள்

சென்னை மற்றும் கடலூர் போன்ற மாநகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் கோடைகாலங்களில் கடுமையான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் எல் நினோ நிகழ்வு காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

வறட்சி மாநிலம்

திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் தீவிர மழை அபாயம் உள்ளது. இது போன்ற நிலைகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? தமிழகத்தில் பல இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. விவசாயிகள் பயிரிட முடியாமல் தத்திளித்து வருகின்றனர். மாநில அரசு ஒன்றிய அரசுசை வலியுறுத்தி நிபுணர் குழுவை அழைத்து வரவேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

கவலை அளிக்கிறது

தமிழகத்தின் எல்.நினோ பாதிப்புகள் குறித்து தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. அனைத்து அமைச்சர்களும் இடைத்தேர்தலில் காட்டும் ஆர்வம் மக்கள் நல செயல்பாட்டில் காட்டுவதாக தெரியவில்லை. நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

நடவடிக்கைகள்

எந்த சவாலையும் வருமுன் காப்பதே சால சிறந்தது அதனை தமிழக அரசு பின்பற்றி பொதுமக்களையும், விவசாயிகளையும் வருமுன் காப்பதற்கு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com