

சென்னை,
இணையவழி நிதி மோசடி: மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை விரைவாகப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் வகையில், இணைய குற்ற புகார் தேசிய உதவி எண் 1930-ல் பெறப்படும் புகார்களுக்காக மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகளை மேம்படுத்தவும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடு தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறையின்படி, 1930 உதவி எண் மூலம் பெறப்படும் ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட இணையவழி நிதி மோசடி புகார்கள், குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலையமைப்பு உடன் தானாகவே ஒருங்கிணைக்கப்பட்டு மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் ( e-Zero FIR) ஆக பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட நபருக்கு. தாம் அளித்த சைபர் குற்றப் புகாரின் அடிப்படையில் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்.
மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக குறிப்பிட்டுள்ள சைபர் குற்ற காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகுமாறும் எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர், அந்த மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புடைய இணைய குற்ற காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்படும். பின்னர் அதிகார வரம்பின் அடிப்படையில் வழக்கமான எப்ஐஆர் ஆக மாற்றப்படும்.
நேரில் சென்று புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023-ன் விதிகளின்படி, மின்னணு முறையில் அளிக்கப்பட்ட புகாரை உறுதிப்படுத்தி, வழக்குப்பதிவை நிறைவு செய்ய, புகார்தாரர் மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தனது புகாரை உறுதிப்படுத்த வேண்டும்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023-ன் பிரிவு 173-ன் கீழ் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவு, கைது செய்யத்தக்க குற்றங்கள் தொடர்பான தகவல்களை மின்னணு முறையில் அளிக்க அனுமதிப்பதுடன், அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) பதிவு செய்யவும் வழிவகுக்கிறது. இதன் மூலம். அதிகார வரம்பு பின்னர் தீர்மானிக்கப்படுவதால். சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி உடனடியாக தொடங்க முடிகிறது.
1930 உதவி எண் மற்றும் CCTNS ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம், ஒரே தகவலை மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது. இதனால். வழக்குப் பதிவு. உரிய காவல் நிலையத்திற்கு மின்னணு பரிமாற்றம் மற்றும் விசாரணை விரைவாக நடைபெறுவதுடன், முக்கியமான பொன்னான நேரம் ( "Golden Hour") நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணத்தை முடக்குதல். டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படுகின்றன.
இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தாமதமின்றி தேசிய இணைய குற்ற உதவி எண் 1930-கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புகொள்ள உடனடியாக புகார் அளிப்பதன் மூலம். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவும். மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும் இயலும்.
மின் - பூஜ்ஜிய எப்ஐஆர் (e-Zero FIR) முறை செயல்படுத்தப்பட்டிருப்பது. இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறையின் விரைவான மற்றும் பொதுமக்களை மையப்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.