கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 16-ந்தேதி(நாளை) முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு வலது மற்றும் இடதுபுறக்கால்வாய்களில் 16.07.2026 முதல் 12.11.2026 வரை 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள 9,012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com