பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

நீர்வரத்து மற்றும் நீரின் இருப்பு பொறுத்து அனைத்து கண்மாய்கள் பாசனத்திற்குத் 28-ந்தேதி வரை நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
Published on: 

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பிளவக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் 23.11.2026 முதல் 4 நாட்களுக்கும் மற்றும் பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் 23.11.2026 முதல் 28.02.2027 வரையிலும் நீர் திறந்துவிடவும், மேலும் நீர்வரத்து மற்றும் நீரின் இருப்பு பொறுத்து அனைத்து கண்மாய்கள் பாசனத்திற்குத் தொடர்ந்து 28.02.2027 வரை நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தைச் சேர்ந்த பின்வரும் கிராமங்களிலுள்ள 3170.89 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்: 1) கான்சாபுரம் 2) எஸ். கொடிக்குளம் 3) வத்திராயிருப்பு 4) வ. புதுப்பட்டி 5) மகாராஜபுரம் 6) சுந்தரபாண்டியம் 7) குன்னூர் 8) நத்தம்பட்டி 9) பாட்டகுளம் 10) சல்லிபட்டி 11) செம்மாண்டி 12) கரிசல்குளம் 13) விழுப்பனூர் 14) தச்சகுடி 15) கிருஷ்ணபேரி 16) மூவரைவென்றான் 17) மங்கலம் 18) நெடுங்குளம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X