திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு


திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
x

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப்பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு ஐந்து (5) சுற்றுகளாக நாளை முதல் (29.01.2025) முதல் 13.06.2025 முடிய 135 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு 10,300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 94,362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story