திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

அணையில் இருந்து 36 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து, பாலாறு படுகை முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 94,521 ஏக்கர் நிலங்களுக்கு 09.06.2026 முதல் 15.07.2026 வரை 36 நாட்களுக்கு, பாசனக் காலத்தை கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com