கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு 'லைசென்ஸ்' கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு


கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
x

இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் அல்லது தொழில் உரிமம் (லைசென்ஸ்) வழங்குவதற்கான விதிகள்-2025 என்ற சட்டத்தை கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால், அரசாணை வெளியிடப்பட்டு தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வணிகம் அல்லது தொழில் செய்பவர்கள் இனி அதற்குரிய கட்டணம் செலுத்தி கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும். இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் பழைய பேப்பர்கள்-இரும்பு பொருட்கள் விற்பனை, கொரியர் சேவைகள், அச்சகம், இறைச்சி-மீன் கடைகள், தையல் தொழில், சலவை கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 119 சேவை தொழில்களும் பட்டியிலப்பட்டு உள்ளன. இந்த தொழில்களுக்கு கிராம பஞ்சாயத்துக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.30 ஆயிரம் வரை லைசென்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story