8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

நாகை முன்னாள் எஸ்.பி. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழக காவல்துறையில் எட்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

1. விருதுநகர் முன்னாள் எம்.பி. கண்ணன், சென்னை காவல்துறை நல்வாழ்வு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. நாகை முன்னாள் எஸ்.பி. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. கரூர் முன்னாள் எஸ்.பி.ஜோஷ் தங்கையா, சென்னை பெருநகர காவல் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பிக்கள் சண்முகம், அனிதா ராஜாராம், மாதவன் ஆகியோருக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. சண்முகம் கியூ பிரிவு எஸ்பியாகவும், ராஜாராஜம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6. சிபிசிஐடி எஸ்பியாக ஜி.எஸ். மாதவனும், காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐஜியாக அனுதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com