மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு உத்தரவு


மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி- தமிழக அரசு உத்தரவு
x

கிறித்துவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 ஆண்டு முதல் 2002-2003-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ; 2003-2004-ம் ஆண்டு முதல் 2009-2010-ம் ஆண்டு வரையிலான காலங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகை உள்ளது.

அதை மாணவர்களிடம் இருந்து வசூலிக்க இயலவில்லை. நிலுவைத் தொகையை வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் எதுவும் அலுவலக ஆவணங்களில் இல்லை. மேலும், வசூலிக்கப்பட வேண்டியவர்களை அடையாளம் காணவும் முடியவில்லை. எனவே அந்த ரூ.48.95 கோடி தொகையை சிறப்பினமாக கருதி அதை முழுவதும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது.

1 More update

Next Story