கவர்னருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்; சி.பி.ராதாகிருஷ்ணன்

மத்தியில் இருப்பது ஒன்றியம் என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? என்று கேள்வி எழுப்பினார்
கோயம்புத்தூர்
மராட்டிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். அவர் இன்று கோவை வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக கவர்னர் நேர்மையானவர். கவர்னருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும். ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு மத்தியில் இருப்பது ஒன்றியம் என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா?
யூனியன் என்பதை எப்படி தமிழில் சொல்வது" என்ற கேள்விக்கு, "உங்களை யார் மொழிபெயர்க்கச் சொன்னார்கள். திமுக அரசு வந்த பிறகுதான் இந்த மொழிபெயர்ப்பெல்லாம் வருகிறது. ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். திமுகவை ஒழிக்க கட்சி தொடங்கிய கமல்ஹாசன் தனது நன்மைக்காக திமுகவை புகழ்கிறார்' என்றார். .
Related Tags :
Next Story






