ரேஷன் கடைகளில் கோதுமை மாவு கிலோ ரூ.15-க்கு விற்க தமிழக அரசு முடிவு

'பாரத் ஆட்டா' திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகளில் கோதுமை மாவு விற்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பாரத் ஆட்டா

வெளிச்சந்தையில், கோதுமை மாவு விலை சராசரியாக, ரூ.60 வரை உள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த, இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, 'பாரத் ஆட்டா' என்ற பெயரில், கிலோ, ரூ.27.50-க்கு கோதுமை மாவு விற்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், கோதுமை மாவு விற்கப்பட்டது.

முன்னோடி திட்டம்

இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'பொது வினியோக திட்டத்தில் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "மத்திய அரசிடம் இருந்து கோதுமை வாங்கி, ஆலைகளில் மாவாக அரைத்து, பாக்கெட்டில் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கோதுமை மாவு என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்று, ஆய்வு செய்யப்படுகிறது. அதை விட குறைவாக, கிலோ ரூ.15-க்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com