ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் ; தமிழக அரசு நடவடிக்கை

ஏடிஜிபி ஜெயராமன் நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நேற்று கோர்ட்டு வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனிடம் திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய காவல்துறை பரிந்துரைத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story






