போராட்டத்தை கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம்

பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தை கைவிட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம்
Published on

சென்னை,

பால் கொள்முதல் விலை உயர்வு கோரி பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அஜய் யாதவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பால் உற்பத்தியாளர்களின் பால் கொள்முதல் விலை உயர்வு கோரிக்கை தொடர்பாக இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் தங்களுடன் நேரில் கலந்து பேசி சுமுகமான முடிவெடுக்க பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படுவதை எதிர்நோக்கி தாங்கள் பால் நிறுத்த போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com