

சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல், என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மாநில அரசின் நிதிநிலை குறித்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்க வேண்டிய நிதி குறித்தும், துறைவாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.