உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் தகவல்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர் தகவல்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்

தமிழகத்தின்திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன- அமைச்சர் பெருமிதம்

மகாகவி பாரதி பெருங்கனவை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது- தங்கம் தென்னரசு

சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

"ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது; உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்; செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது; நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம்

உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்;தங்கம்தென்னரசு

தமிழ்நாடு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது:தங்கம்தென்னரசு

விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகைய திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை. மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பால் தமிழக அரசு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது

நாடே திரும்பிப் பார்த்தது-தங்கம் தென்னரசு

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவில் முன்னோடி திட்டமாக உள்ளது, பிற மாநிலங்கள் பின்பற்றுவதுதான் இந்த திட்டத்தின் மிகப் பெரிய வெற்றி!மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5000 செலுத்தப்பட்டபோது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. 3 மணி நேரத்திற்குள் 1.31 கோடி மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைத்தபோது நாடே திரும்பிப் பார்த்தது” - பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் விளக்கம்

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர். -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள்

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத்திறனை வளர்க்க 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

- தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

  முதலிடத்தில் தமிழ்நாடு

கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளம் சிசுக்களையும் காப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாகச் செயல்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” - தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

மெட்ரோ ரயில்திட்டம்- அமைச்சர் முக்கிய அறிவிப்பு

"கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எவ்வளவு நிதி?

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகால அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்குத் தேவையான மொத்த நிதியும் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com