

சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாய்குமார், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி, யார் இந்த சாய்குமார் என்பதை பற்றி பார்ப்போம். புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாய்குமார், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரது முதன்மை செயலாளராக இருந்தவர். தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகள் கழித்து வருவாய் நிர்வாக ஆணையாக இருந்த ரஜேஷ் லக்கானி மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதற்கு முன்பு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், செய்தித்தாள் நிறுவனம் ஆகியவற்றின் மேலாண்மை இயக்குனராக இருந்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் மின்வாரிய தலைவராக இருந்து, சாய்குமார் திறமையாக செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.