விஜய்யை சந்திக்க தமிழக கவர்னர் மறுப்பு?

நடுவழியில் திடீரென விஜய் வாகனம் யூ டேர்ன் போட்டு மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பி சென்றது..
விஜய்யை சந்திக்க தமிழக கவர்னர் மறுப்பு?
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்,மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி பெரும்பான்மையை எட்டியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்ததால், தவெகவிற்கு ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஆளுநரை சந்திக்க அனுமதி கோரி விஜய் கிண்டி லோக்பவன் புறப்பட்டார். ஆனால் நடுவழியில் திடீரென அவரது வாகனம் யூ டேர்ன் போட்டு மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பி சென்றது.. விஜய்யை சந்திக்க தமிழக கவர்னர் அனுமதி மறுத்துவிட்டதாக சிபிஎம் தலைவர் சண்முகமும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று முறை விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com