திருவள்ளூரில் அறிவுசார் நகரம் - டெண்டர் கோரியது தமிழக அரசு


திருவள்ளூரில் அறிவுசார் நகரம் - டெண்டர் கோரியது தமிழக அரசு
x

அறிவுசார் நகரத்திற்கான உட்கட்டமைப்பு பணிகளை ரூ.89 கோடியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் 2022-2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவுசார் நகரம் குறித்து அறிவிப்பு முதன் முறையாக வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும் என்றும், அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் இந்த அறிவுசார் நகரத்தில் அமைந்திருக்கும். பசுமையான வாழ்விட சூழலில் அடுத்த தலைமுறைக்கான புத்தாக்கத்தை உத்வேகத்துடன் ஊக்குவிக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்நகரம் திகழும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்கப்பட திட்டமிட்டுள்ளது. அறிவுசார் நகரத்திற்கான உட்கட்டமைப்பு பணிகளை ரூ.89 கோடியில் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்நகரத்திற்கான சாலை, மழைநீர் வடிகால், சிறுவாய்க்கால் பாலங்கள், கழிவுநீர் குழாய்களை அமைக்க டெண்டர் கோரி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story