அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

வினாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன நிலங்களின் 2025-2026-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்காக, அமராவதி அணையிலிருந்து, அமராவதி ஆற்று மதகு வழியாக 07.06.2025 முதல் 20.10.2025 வரை 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், வினாடிக்கு 300 கன அடி வீதம் 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com