இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: அம்மாநில முதல்-மந்திரி கடிதம்

ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்
இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: அம்மாநில முதல்-மந்திரி கடிதம்
Published on

சென்னை,

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்

இது தொடர்பாக இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் எழுதியுள்ள கடிதத்தில் ,

இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சவாலான நேரத்தில் தமிழக அரசு வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க பயன்படுத்தப்படும். இந்த உதவியானது பேரழிவிற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பவும், மீளவும் உதவும்.

மீண்டும் ஒருமுறை, இந்த சவாலான நேரத்தில் தளராத ஆதரவிற்காக உங்களுக்கும், உங்கள் மாநில மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தாராள மனப்பான்மையும், கருணையும் எங்களுக்கு இந்த கஷ்டத்தை சமாளிக்கும் நம்பிக்கையையும், வலிமையையும் அளித்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com