மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை ஸ்டாலின் வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
Published on

சென்னை,

தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை விமான நிலையத்தில்செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்துள்ளேன். தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அவரது இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்.

ஏனெனில் டெல்லியிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல திட்டங்களையும் அவர்கள் முழுமையாக அழித்துவிட்டார்கள்.

மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை ஸ்டாலின் வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி சீர்திருத்த மசோதா ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். அது தோற்கடிக்கப்பட்டது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது மத்தியில் உள்ள மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும். இப்போது பாஜ அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com