பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு - தங்கம் தென்னரசு

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26வது ஆண்டில் 10.83 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ்நாடு என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தொடர்ந்து 2-வது நிதி ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது நம் தமிழ்நாடு! எந்தத் தடையையும் தகர்த்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக நிலைநிறுத்திவரும் நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற தொலைநோக்குப் பார்வைக் கொண்ட தலைவனின் கனவுகளும் உழைப்புமே இதற்கு மூல முதற்காரணம்.

தொழில் வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் சரியான திட்டமிடல் என அனைத்துத் துறைகளிலும் முதல்வர் காட்டி வரும் அக்கறையே, இன்று நம் மாநிலத்தை இந்தச் சிகரத்தில் ஏற்றி வைத்துள்ளது. வளர்ச்சி நாயகன் தலைமையில் திராவிட மாடல் 2.0-வில் தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளைப் புரியும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com