

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- உடல் கவசம், முகக் கவசங்கள் தேவையான அளவு உள்ளது; தட்டுப்பாடு இல்லை.
1.50 லட்சம் நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் ஆகும். சாதாரண சளி காய்ச்சல் இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்வதை உறுதி செய்துள்ளோம். கொரோனாவில் இருந்து மருத்துவர்களை பாதுக்காக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றார்.