தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நல சங்க கூட்டம்

நாலாட்டின்புத்தூர் அருகே தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நல சங்க கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நல சங்க கூட்டம்
Published on

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்க தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுடலைமுத்து, மாநில இணை செயலாளர் வேல்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகுசுப்பு வரவேற்றார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு அறிக்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட தலைவராக வடிவேல்முருகன், செயலாளராக செல்லத்துரை, பொருளாளராக ராமசுப்பு, மற்றும் துணை தலைவர்கள், இணை செயலாளர், மகளிர் அணி செயலாளர்கள், இலக்கிய அணி, தகவல் தொடர்பு அணி மற்றும் துறை வாரியாக இணை செயலாளர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com