போதை கலாச்சாரத்தில் தமிழகம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கடும் வறட்சி, கஜா புயல், கொரோனா என பல சோதனைகளிலும் நல்ல நிர்வாகம் கொடுத்தோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
போதை கலாச்சாரத்தில் தமிழகம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவியது. விவசாய தொழிலாளர்களையும் கண்ணை இமைக்காப்பது போல் காப்பாற்றினோம்.விவசாயிகளின் நண்பனாக, தோழனாக, அவர்களை காப்பாற்றிய அரசு அதிமுக அரசு. திமுக ஆட்சியின்போது ஹைட்ரோகார்பன், மீத்தேன் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.

காவிரி படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தோம். விவசாயிகளுக்கு உர மானியம், உணவு மானியம், குறுவை சாகுபடி தொகுப்புகளை கொடுத்தோம்.விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி வேளாண் கடன்களை அதிமுக அரசு தள்ளுபடி செய்தது.

கொரோனா சோதனையிலும் நல்லாட்சி தந்தது அதிமுக.கடும் வறட்சி, கஜா புயல், கொரோனா என பல சோதனைகளிலும் நல்ல நிர்வாகம் கொடுத்தோம். வருமானம் வரும் காலத்திலும் திமுக அரசு கடன் வாங்குகிறது. நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசு. போதை கலாச்சாரத்தில் தமிழகம் உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com