தமிழ்நாடு சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற பொங்கல் பெருவிழாவை போற்றுவோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நம் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற இச்சமத்துவப் பெருவிழாவை போற்றுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் சமத்துவமும் - ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வோம்.

நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 2026-ல் 200-க்கும் அதிகமான இடங்களில் கழக அணி வெல்ல தமிழர் திருநாளில் உறுதியேற்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com