

சென்னை,
சென்னை விளையாட்டுத்துறையின் 5 ஆண்டுகால சாதனை விளக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
அரசின் திட்டங்கள்தான் இவ்வளவு வீரர்கள் சாதிக்க உதவியது. துடிப்புடன் செயல்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்களையும் விளையாட்டுத் துறையையும் உதயநிதி வளர்த்துள்ளார்.
உலகம் போகும் வேகத்தில் ஒரு முறை மட்டும் ஜெயித்தால் போதாது. மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். இன்றைய டீனேஜ் மாணவர்கள்தான் நம் எதிர்காலம் இளைஞர்களை பாதுகாப்பாக வளர்த்தெடுப்பது எங்கள் பொறுப்பு.
அதிமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கவில்லை. விளையாட்டு வீரர்களுக்கான 76 பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். 116 விளையாட்டு வீரர்களை அரசு பொதுத்துறையில் பணியமர்த்தியுள்ளோம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 2023-ல் 76 பயிற்சுநர்களை பணியில் அமர்த்தி உள்ளோம். 34 பயிற்றுநர் அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டோம்.
திமுக அரசு செய்த சாதனைகளை சொல்ல காரணம், மேலும் பல வீரர்கள் ஊக்கம் பெற வேண்டும் என்பதே.சிறந்த விளையாட்டு வீரர்கள், வெளிநாடுகளில் பயிற்சி பெற போட்டியில் பங்கேற்க நிதி உதவி அளிக்கப்படுகிறது. தேசிய போட்டிகளில் வென்ற வீரர்களுக்கான நிதி உதவி உள்பட அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மகுடம் வைக்கும் வகையில் ரூ.261 கோடியில் சர்வதேச விளையாட்டு நகரம் சென்னையில் அமைய உள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற 5,406 வீரர்களுக்கு ரூ.177.80 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளுக்கும் இதற்கு இணையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 241 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 29.67 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் Healthy-ஆக இருந்தால், நம்ம மாநிலமும் Healthy-ஆக இருக்கும்.
தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க இளைஞர்களும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.