பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு


பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு-  விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு
x

அமைதியான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்தநிலையில் தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், அக்கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி கலந்து கொண்டு பேசியதாவது:-

வணக்கம். நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம். நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது.

ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது என்றார். தவெக தலைவர் விஜய் தொடர்ந்து திமுக அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில்,ஆற்காடு நவாப்பின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

1 More update

Next Story