மருத்துவத்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது

மருத்துவத்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது என தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் கூறினார்.
மருத்துவத்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர். 

மருத்துவத்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது என தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர் கூறினார்.

ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூ கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் 35-வது ஆண்டுவிழா கல்லூரி செயலாளா சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.

தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் (இ.எஸ்.ஐ.) இயக்குனர் டாக்டர் ராஜா மூர்த்தி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மருத்துவத்துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. மேலும் மருத்துவத்தில் புதிய டெக்னாலஜிகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவதிலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மருத்துவத்துறையில் வேகமாக முன்னேறி வருகிறது.

மருத்துவ சேவை

தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அத்துடன் காப்பீட்டு திட்டத்தில் அதிக பேர் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை டேப்ளட்ஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் சதீஸ் கவுரவ விருந்தினராகவும், மதுரை மருத்துவ கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் முருகேஷ் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் விருந்தினர்கள் வழங்கி பாராட்டினர். 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலசலிங்கம் பார்மசி கல்லூரிக்கும், டேப்ளட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முடிவில் பேராசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com