தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றிபெற்றது.
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. அதேவேளை, தவெக அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நம்பிக்கை தீர்மானத்தை முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதையடுத்து, நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப்பின் நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் தவெக அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்தின் மீது நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தனர். அதேவேளை, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் தவெக அரசுக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றிபெற்ற நிலையில் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com