ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்து முன்னிலை
Published on

சென்னை,

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாலை 7 மணி வரை வெளியான முடிவுகளின் படி பெரும்பாலான இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 88 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 2 இடங்கள் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

*1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 353 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 59 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com