சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆதரவு

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க தங்களது கட்சி முழுமையாக பாடுபடும் என ஷேக் தாவூத் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆதரவு
Published on

சென்னை,

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அப்போது, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைக்க தங்களது கட்சி முழுமையாக பாடுபடும் என உறுதி அளித்தார்.

பின்னர், ஷேக் தாவூத் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதி தி.மு.க. ஏமாற்றி வருகிறது. எனவே, மாற்றம் தேவை. உரிமையை நோக்கி நடப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திப்போம்‘ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com