‘தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு ஒரு ஆபீஸ் கூட கிடையாது’ - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பண்ணாட்டு மையம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு ஒரு ஆபீஸ் கூட கிடையாது’ - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு ஒரு ஆபீஸ் கூட கிடையாது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒலிம்பிக் பவன் உள்ளது. ஒரு ஆபீஸ் செயல்பாட்டில் இருந்து வருகிறது. எனவே தமிழ்நாட்டிலும் ஒலிம்பிக் அசோசியேஷனுக்கான ஆபீஸ் அமைப்பதற்கு இடம் பார்த்து வருகிறோம்.

கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பண்ணாட்டு மையம் திறக்கப்பட உள்ளது. சுமார் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. சினிமா நிகழ்ச்சிகள், வணிக நிகழ்ச்சிகளை நாம் அங்கு கொண்டு போகலாம். அதன் பின்பு விளையாட்டு மைதானங்களை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்த தொடங்குவோம்.

ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு அரசு சார்பில் இதுவரை எந்தவித உள்கட்டமைப்பும் செய்து கொடுக்கவே இல்லை. ஒலிம்பிக் கட்டமைப்புக்கான செலவை நாம் செய்யவே இல்லை. விளையாட்டு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் மறு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com