

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வட்டிச்செலவு தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் ரூ.41,564 கோடியாக இருந்த வட்டிச்செலவு, 2022-23-ம் ஆண் டில் ரூ.46,909 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டில் ரூ.53,566 கோடியாகவும், 2024-25-ம் ஆண்டில் ரூ.59,905 கோடியாகவும் உயர்ந்தது. தற்போது 2025-26-ம் ஆண்டில் அது ரூ.67,050 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம் 5 ஆண்டுகளில் வட்டிச் செலவு ரூ.25,486 கோடி அதிகரித்துள்ளது. இது 61 சதவீத உயர்வாகும்.
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் 22.82 சதவீதமும், சொந்த வரி வருவாயில் 34.83 சதவீதமும் வட்டிச் செலவுக்காக செலவிடப்படுகிறது. இதன்படி மாநில அரசு வசூலிக்கும் ஒவ்வொரு ரூ.100 வரியிலும் சுமார் ரூ.35 கடனுக்கான வட்டியை செலுத்த பயன்படுகிறது. அதாவது சாலைகள், பாலங் கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பிற நிரந்தர சொத்து களை உருவாக்குவதற்கான முதலீடுக்கு 2025-26-ம் ஆண்டில் மூலதனச் செலவினம் ரூ.50.911 கோடியாக இருக்கும் நிலையில், வட்டிச் செலவு மட்டும் ரூ.67,050 கோடியாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வட்டிக்கு மட்டும் ரூ.67,050 கோடி செலவிடுவதை பார்த்தால், ஒரு மாதத்திற்கு சராசரியாக ரூ.5,587 கோடியும், தினமும் ரூ.184 கோடியும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.7.7 கோடியும் வட்டிக்காக செலவிடப்படும் நிலை உருவாகியுள்ளது.